ஒமைக்ரான் பாதிப்பு எல்லா இடங்களிலும் பரவி இருக்க கூடும்; பெங்களூரு மாநகர ஆணையாளர் எச்சரிக்கை
ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு எல்லா இடங்களிலும் பரவியிருக்க கூடும் என பெங்களூரு மாநகர ஆணையாளர் கவுரவ் குப்தா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
பெங்களூரு,
இந்தியாவின் கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று உறுதிப்படுத்தி உள்ளது. அவர்களில் ஒருவர் 66 வயதுடைய தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த ஆண் ஆவார். மற்றொருவர் 46 வயது மருத்துவர் ஆவார்.
ஒமைக்ரான் பாதித்த 46 வயது மருத்துவருடன் தொடர்புடைய 5 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், பெங்களூரு மாநகர ஆணையாளர் கவுரவ் குப்தா இன்று கூறும்போது, ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு எல்லா இடங்களிலும் பரவியிருக்க கூடும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.