ஐக்கிய முற்போக்கு கூட்டணி தற்போது இல்லை: மம்தா பானர்ஜி

என்ன ஐக்கிய முற்போக்கு கூட்டணி? ஐக்கிய முற்போக்கு கூட்டணியே இல்லை என மம்தா பானர்ஜி கூறினார்.

Update: 2021-12-01 16:02 GMT
மும்பை,

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தற்போது பலவீனமாக இருக்கும் பகுதியில் தனது கட்சியை விரிவுபடுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார். ஏற்கெனவே, கோவாவில் சில காங்கிரஸ் தலைவர்களை மம்தா பானர்ஜி தனது கட்சிக்கு இழுத்திருக்கிறார். 

தற்போது மம்தா பானர்ஜி மும்பைக்கு மூன்று நாள்கள் பயணமாகச் சென்றிருக்கிறார். மும்பையில் முகாமிட்டிருக்கும் மம்தா, மராட்டிய அரசியல் தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்து வருகிறார்.  அந்த வகையில், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை இன்று மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினர். 

இந்த சந்திப்புக்கு பிறகு பேசிய மம்தா பானர்ஜியிடம் செய்தியாளர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு சரத்பவார் தலைமை தாங்குவாரா என்று கேட்டதற்கு, ``என்ன ஐக்கிய முற்போக்கு கூட்டணி? ஐக்கிய முற்போக்கு கூட்டணியே இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இது குறித்து முடிவு செய்வோம்" என்றார்.

மேலும் செய்திகள்