புதுச்சேரியில் மே 24ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
புதுச்சேரியில் மே 24ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கொரோனா தொற்று பன்மடங்கு அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானவா்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்த நிலையில் புதுச்சேரியில் மே 24ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.