கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,971 பேருக்கு கொரோனா பாதிப்பு

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-08 13:16 GMT
கோப்புப்படம்
திருவனந்தபுரம்,

நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், சூழலுக்கு ஏற்ப மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அண்டை மாநிலமான கேரளாவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கேரளாவில் இன்று காலை 6 மணி முதல் வரும் 16-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் 41 ஆயிரத்து 971 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 66 ஆயிரத்து 827 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 101 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 27 ஆயிரத்து 456 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 43 ஆயிரத்து 633 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தாக்குதலுக்கு 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் செய்திகள்