கொரோனா தொற்றால் உத்தர பிரதேசத்தில் இதுவரி 11 எம்எல்ஏ.க்கள் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் உத்தர பிரதேச மாநிலத்தில் இதுவரை 11 எம்எல்ஏ.க்கள் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2021-05-08 09:58 GMT
Image courtesy : Reuters
லக்னோ

இவர்கள் பாஜக மற்றும் சமாஜ் வாதி கட்சியை சேர்ந்தவர்கள். முதல் பரவலில் உ.பி. மாநில கேபினட் அமைச்சர்கள் 2 பேர் உள்ளிட்ட 7 எம்எல்ஏ.க்கள் இறந்தனர்.

கொரோனா இரண்டாவது பரவலில், கடந்த 15 நாட்களில் மட்டும் உத்தரபிரதேசத்தில்  ஆளும் பா.ஜ.க.வின் 4 எம்எல்ஏ.க்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ராய் பரேலியின் பகதூர் கோரி நேற்று உயிரிழந்தார். ஏப்ரல் 23-ல் அவுரய்யாவின் ரமேஷ் சந்திரா திவாகர், லக்னோவின் மேற்கு தொகுதியில் சுரேஷ்குமார் ஸ்ரீவத்ஸவா ஆகிய இருவரும் ஒரே நாளில் இறந்துள்ளனர்.

இதையடுத்து, ஏப்ரல் 28-ல் நவாப்கன்சின் பா.ஜ.க எம்எல்ஏ.வான கேசர்சிங் கங்குவார் கொரோனாவிற்கு உயிரிழந்தார். கடைசியாக இறந்த இந்த நால்வரும் பஞ்சாயத்து தேர்தலில் தீவிரமாக கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுடன் சேர்த்து கொரோனாவினால் இதுவரை 11 எம்எல்ஏ.க்கள் இறந்துள்ளனர். மேலும், பா.ஜ.க.வை சேர்ந்த வீரேந்திரா சிங், லோகேந்திரா சிங் ஆகியோர் விபத்து மற்றும் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தனர்.

உத்தரபிரதேசத்தில் இறந்த இந்த 13 எம்எல்ஏ.க்களின் இடங்கள் காலியாகவே உள்ளன. இந்த இடங்களுக்கு இடைத்தேர்தல் 3 மாதங்களில் நடத்தப்பட வேண்டும். ஆனால், கொரோனா பரவலால் தேர்தல் நடத்துவது ஆபத்தானது. மேலும், உத்தரபிரதேசத்தின்  18-வது சட்டசபிக்கான  தேர்தல் பிப்ரவரி 2022-ல் நடைபெற உள்ளது. எனவே, 13 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்படுவது சந்தேகமே எனகூறப்படுகிறது.

மேலும் செய்திகள்