உத்தர பிரதேசத்தில் சபாரி பூங்காவில் 2 பெண் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

உத்தர பிரதேசத்தில் சபாரி பூங்காவில் 2 பெண் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் அவை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.

Update: 2021-05-08 03:11 GMT
லக்னோ,

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலையில் சிக்கி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  அரசியல், விளையாட்டு, திரையுலகம் என பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் விதிவிலக்கின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சூழலில், வன விலங்குகளும் கொரோனா பாதிப்புகளில் இருந்து தப்பவில்லை.  அந்த வகையில் ஐதராபாத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சமீபத்தில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் எட்டவாவில் உள்ள சபாரி பூங்காவில் 2 பெண் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.  இதனையடுத்து அங்குள்ள 14 சிங்கங்களின் மாதிரிகளை சேகரித்து பரேலியில் உள்ள பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

அவற்றில் 2 பெண் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து அவை இரண்டும் மற்ற சிங்கங்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன என சபாரி பூங்காவின் இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்