மத்திய பிரதேசத்தில் மே 15 வரை முழு ஊரடங்கு; சாலைகள் வெறிச்சோடின
மத்திய பிரதேசத்தில் மே 15 வரையிலான முழு ஊரடங்கை முன்னிட்டு கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
போபால்,
மத்திய பிரதேச மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளையடுத்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. இதன்படி, தலைநகர் போபாலில் ஜனதா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவு வருகிற 15ந்தேதி வரை அமலில் இருக்கும். இதன்படி, பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. வாகனங்களில் சுற்றி திரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊரடங்கை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் ஆகியவை எதுவும் இன்றி சாலைகள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன.