சிக்கமகளூரு அருகே துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை-திருமணம் ஆகாத விரக்தியில் விபரீதம்

சிக்கமகளூரு அருகே திருமணமாகாத விரக்தியில் விவசாயி ஒருவர் துப்பாக்கியால் தனது தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் நடந்துள்ளது.

Update: 2021-05-06 19:12 GMT
சிக்கமகளூரு:
சிக்கமகளூரு அருகே திருமணமாகாத விரக்தியில் விவசாயி ஒருவர் துப்பாக்கியால் தனது தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம் நடந்துள்ளது.
திருமணம் ஆகாத விரக்தி
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா பாலேஒன்னூர் அருகே உள்ள பிதரே கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 37). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. 
கடந்த 10 ஆண்டுகளாக சஞ்சய்க்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் பெண் தேடும் படலத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவருக்கு சரியான வரன் அமையவில்லை. இதனால் திருமணம் ஆகாத விரக்தியில் சஞ்சய் இருந்து வந்ததார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சஞ்சய், தனது வீட்டு அறையில் வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து கொண்டு வீட்டின் பின்புறம் உள்ள கார் நிறுத்தும் இடத்திற்கு சென்று உள்ளார். 
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
பின்னர் அங்கு வைத்து சஞ்சய், துப்பாக்கியால் தனது தலையை நோக்கி சுட்டு தற்கொலை செய்து கொண்டார். துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு அதிர்ந்த குடும்பத்தினர், கார் நிறுத்தும் இடத்திற்கு வந்து பார்த்துள்ளனர். 
அப்போது சஞ்சய் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சஞ்சயின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் சம்பவம் குறித்து பாலேஒன்னூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் சஞ்சயின் உடலை பார்வையிட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், திருமணமாகாத விரக்தியில் சஞ்சய் துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. 
சோகம்
இதுகுறித்து பாலேஒன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பிதரே கிராமத்தில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்