3-வது கொரோனா அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம்: உத்தவ் தாக்கரே
3-வது கொரோனா அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
3-வது அலை
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆன்லைன் மூலம் பொது மக்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சில மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. எனவே பொது மக்கள் நோய் பரவல் குறைந்துவிட்டது என அலட்சியமாக இருக்க கூடாது. பொது மக்கள் முககவசம் அணிந்து எப்போதும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மத்திய நிபுணர் குழுவினர் 3-வது கொரோனா வைரஸ் அலை குறித்து எச்சரித்து உள்ளனர். நாம் 3-வது அலையை எதிர்கொள்ள கடந்த மாதம் முதலே தயாராகி வருகிறோம்.
சுப்ரீம் கோர்ட்டு பாராட்டுமும்பையில் நோய் பரவல் கட்டுபடுத்தப்பட்டதை சுப்ரீம் கோர்ட்டை பாராட்டி உள்ளது. நாம் தினந்தோறும் 1,200 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்து வருகிறோம். ஆனால் 1,700 டன் பயன்படுத்துகிறோம். எனவே ஆக்சிஜன் உற்பத்தியை 3 ஆயிரம் டன் ஆக உயர்த்த பணிகள் தொடங்கி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.