காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு; 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை, ஒருவர் சரணடைந்தார்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தின் கனிகாம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் அப்பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது பயங்கரவாதிகள் திடீரென தாக்குகுதல் நடத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் பேசி சரணடைய வைக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
இருப்பினும் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால், பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் ஒருவரான தவுசிஃப் அகமது என்ற நபர் சரணடைந்தார். உயிரிழந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
#ShopianEncounterUpdate: One newly recruited #terrorist namely Tausif Ahmad #surrendered. #Operation in progress. Further details shall follow. @JmuKmrPolicehttps://t.co/WNsRDrdUS5
— Kashmir Zone Police (@KashmirPolice) May 6, 2021