பெங்களூருவில் மேலும் 36 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
பெங்களூருவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 946 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரு,
பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பெங்களூருவில் தினமும் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதுபோல், போலீசாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில் இருந்து நேற்று காலை வரை பெங்களூருவில் 36 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பெங்களூருவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான போலீசாரின் எண்ணிக்கை 946 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 11 போலீசார் கொரோனாவுக்கு தங்களது உயிரை பறி கொடுத்துள்ளனர்.
கொரோனா பாதித்தவர்களில் 181 பேர் குணமடைந்துள்ளனர். 723 போலீசார் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 31 பேர் ஆஸ்பத்திரி மற்றும் கொரோனா மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒட்டு மொத்தமாக 754 போலீசார் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் போலீசாருக்கு 2-ம் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.