ஐசியூ பிரிவில் சிகிச்சை பெறும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 நிதியுதவி - மனோகர் லால் கட்டார் அறிவிப்பு
தனியார் மருத்துவமனைகளில் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெறும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 நிதியுதவி அளிக்கப்படும் என அரியான முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.
சண்டிகர்,
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் ஆக்ஸிஜன் விநியோகிக்கும் வகையில் சண்டிகரில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், இதுவரை ஒடிசாவிற்காக 70 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் விநியோகம் செய்வதற்காக 20 டேங்கர் லாரிகளும் அரசு சார்பில் வாங்கப்பட்டுள்ளது.
எனினும் உரிய இடங்களுக்கு ஆக்சிஜன் விநியோகம் செய்வதற்கு மேலும் டேங்கர் லாரிகள் தேவைப்படுகின்றன என்று கூறினார்.
இந்தநிலையில் தனியார் மருத்துவமனைகளில் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெறும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 நிதியுதவி அளிக்கப்படும் என அரியான முதல்-மந்திரி அலுவலகம் தெரிவித்துள்ளது.