கொரோனாவுக்கு எதிரான போரில் கேரளா சிறப்பாக செயல்பட்டு வருகிறது - பிரதமர் மோடி பாராட்டு

கொரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்டு வரும் கேரளத்தை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

Update: 2021-05-05 10:25 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவிற்கு மத்திய அரசு அளித்த கொரோனா தடுப்பு மருந்துகள் வீணாவதைப் பெருமளவு தடுத்து, அதிக எண்ணிக்கையிலானோருக்கு சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். குறிப்பாக செவிலியர்கள் பணி பாராட்டுக்குறியது. கேரளத்திற்கு 73,38,806 தடுப்பு மருந்துகளை மத்திய அரசு அனுப்பியது. ஆனால் நாங்கள் 74,26,164 பேருக்கு கரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளோம்'' என்று முதல்வர் பினராயி விஜயன் தமது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி கொரோனாவுக்கு எதிரான போரில் கேரள மாநிலம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தமது டுவிட்டர் பதிவில், ''தடுப்பூசி வீணாவதைத் தடுப்பதில் நமது சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் முன்மாதிரியாக விளங்குகின்றனர். தடுப்பூசிகள் வீணாவதைத் தடுப்பது கொரோனாவுக்கு எதிரான போரில் மிகவும் முக்கியமானது'' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்