மேற்கு வங்காள முதல்-மந்திரியாக மம்தா பானர்ஜி 3 வது முறையாக பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
மேற்கு வங்காள முதல்-மந்திரியாக 3 வது முறையாக பதவியேற்றுக்கொண்ட மம்தா பானர்ஜிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் கடும் சவாலை எதிர்கொண்டு, மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவாக ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மம்தா, தொடர்ந்து 3-வது முறையாக முதல்-மந்திரியாக இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.
கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜிக்கு ஆளுநர் ஜெகதீப் தங்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் மேற்கு வங்காள முதல்-மந்திரியாக பதவியேற்றுக்கொண்ட மம்தா தீதிக்கு வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Congratulations to Mamata Didi on taking oath as West Bengal’s Chief Minister. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) May 5, 2021