வங்காளத்திற்கான வெற்றி; எழுந்து நின்று பேட்டியளித்த மம்தா பானர்ஜி

வங்காளத்திற்கான வெற்றி இது என்று மம்தா பானர்ஜி சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து நின்று பேட்டியளித்து உள்ளார்.

Update: 2021-05-03 00:59 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.  இதனால் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது.

நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றுள்ளார் என தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.  ஆனால், அதற்கு முன் மம்தா பானர்ஜி வெற்றி என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறும்பொழுது, ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.  கொரோனா விதிமுறைகளை கடைபிடியுங்கள்.  வெற்றி பேரணிகளை நடத்த வேண்டும் என அனைவரையும் வேண்டி கேட்டு கொள்கிறேன்.

ஒவ்வொருவரும் அவர்களுடைய வீட்டிற்கு செல்லும்படி வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.  நமது முன்னுரிமை கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவது ஆகும்.  இது வங்காளத்திற்கான வெற்றி.  வங்காளத்திலேயே இது சாத்தியப்படும் என்று கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில் காயம்பட்டதில் சக்கர நாற்காலியிலேயே பிரசாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்கொண்ட மம்தா பானர்ஜி, தேர்தல் வெற்றியை தொடர்ந்து அதில் இருந்து எழுந்து சில அடி தூரம் நடந்து சென்று தொண்டர்களை ஆச்சரியப்படுத்தினார்.

மேலும் செய்திகள்