சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு - சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 3ஆவது வாரத்தில் தற்காலிகமாக வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிவித்துள்ளது.

Update: 2021-05-01 17:16 GMT
புதுடெல்லி,

10ஆம் வகுப்பு  மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 4 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. இதில் பத்தாம் வகுப்புத் தேர்வை  21,50,761 பேரும், பிளஸ் 2 தேர்வை 14,30,243 பேரும் எழுத இருந்தனா்.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்ததைத் தொடர்ந்து சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தோவு ரத்து செய்யப்பட்டது.

அதே நேரம், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தோவை ஒத்திவைக்கப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. கொரோனா நிலவரம் குறித்து ஜூன் 1-ஆம் தேதி சிபிஎஸ்இ ஆய்வு செய்த பிறகு, பிளஸ் 2 தோவுக்கான மறு தேதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 3ஆவது வாரத்தில் தற்காலிகமாக வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிவித்துள்ளது.

10ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்ததால் உள்மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்