கர்நாடகாவில் புதிதாக 40,990 பேருக்கு கொரோனா தொற்று
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40,990 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தகவல்களை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,
புதிதாக 40,990 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 15,64,132 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 271 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 15,794 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 18,341 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 11,43,250 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 4,05,068 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அங்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 23.03 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 0.66 சதவிகிதமாக உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.