ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும்: வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன் என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி,
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இன்று சட்ட சபை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டரில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில்,” தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெறுவதால், அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்களை நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். இதேபோல், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட பிராந்திய மொழிகளிலும் பிரதமர் மோடி தனது வேண்டுகோளை பதிவிட்டுள்ளார்.