கொரோனா தடுப்பூசி போட வயது வரம்பின்றி அனுமதியளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ராஜஸ்தான் முதல்-மந்திரி கோரிக்கை

கொரோனா தடுப்பூசி போட வயது வரம்பின்றி அனுமதியளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராஜஸ்தான் முதல்-மந்திரி கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-04-05 15:16 GMT
ஜெய்ப்பூர்,

நாட்டின் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், வயது வரம்பின்றி அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதியளிக்கும் படி, பிரதமர் மோடிக்கு ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் வலியுறுத்தியுள்ளார்.

வயது வரம்பு நீக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதியளிக்கும் போது தான், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்