காஷ்மீரில் டாக்டர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் அனைத்தும் ரத்து
காஷ்மீரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து, டாக்டர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு,
காஷ்மீரில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து, டாக்டர்கள் மற்றும் துணை டாக்டர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்துள்ளதாக மருத்துவ சுகாதார இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காஷ்மீர் இயக்குநர் முஷ்தாக் அஹ்மத் வெளியிட்டுள்ள உத்தரவில்,
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கொரோனா தொற்று அதிகளவில் பரவியுள்ளதால், மருத்துவ கண்காணிப்பாளர்கள், மாவட்ட மற்றும் தடுப்பு மருத்துவ அதிகாரிகள் மற்றும் துணை டாக்டர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விடுமுறைகளும் உடனடியாக ரத்து செய்யப்படுகின்றன.
மகப்பேறு மற்றும் அவசர விடுப்பில் உள்ள ஊழியர்களைத் தவிர மற்று அனைவரும் உடனடியாக தாங்கள் பணியிடங்களில் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று முதல் மூடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.