அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவேண்டும்; தொண்டர்களுக்கு நவநிர்மாண் சேனா வேண்டுகோள்
அரசு விதித்திருக்கும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு தொண்டர்களுக்கு, நவநிர்மாண் சேனா கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
தீவிர நடவடிக்கை
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு காட்டுத்தீயை விட வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது.அதுமட்டும் இன்றி வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்குமாறு நவநிர்மாண் சேனா கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
உத்தவ் தாக்கரே கோரிக்கைமுதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை அழைத்து ஒத்துழைப்பு கோரியதை தொடர்ந்து கட்சி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
தயவு செய்து அரசின் நடவடிக்கைளுக்கு நவநிர்மாண் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பை கொடுங்கள், அவர்கள் விதிக்கும் காட்டுப்பாடு உத்தரவுகளை பின்பற்றுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கொரோனா அதிகரிப்பை தொடர்ந்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பல்வேறு துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு கூறிவருவது குறிப்பிடத்தக்கது.