“பிரதமர் மோடி விவசாயிகளை வஞ்சிக்கிறார்” - சித்தராமையா விமர்சனம்

பிரதமர் மோடி விவசாயிகளை வஞ்சித்து வருவதாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா விமர்சித்துள்ளார்.

Update: 2021-04-03 19:00 GMT
பெங்களூரு,

கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா நுக்லுஹள்ளியில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா ஹெலிகாப்டர் மூலம் அங்கு வந்தார்.

இதற்காக அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட் தளத்தில் வந்திறங்கிய சித்தராமையாவை ஹாசன் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றனர். பின்னர் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது:-

பிரதமர் மோடி விவசாயிகளை வஞ்சித்து வருகிறார். வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து விவசாய நிலங்களை பறித்து பெரிய தொழில் அதிபர்களுக்கு கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கு அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

சென்னராயப்பட்டணா தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க காங்கிரஸ் ஆட்சியில் ரூ.176 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதனால் தாலுகாவில் பல்வேறு ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டது. பா.ஜனதா ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்