விவசாய தலைவர் வாகனம் மீது கல்வீச்சு ராகுல் காந்தி கண்டனம்

விவசாய தலைவர் வாகனம் மீது கல்வீச்சு சம்பவத்திற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-04-03 17:25 GMT
புதுடெல்லி, 

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் டிகாய்த் வாகனம் மீது, ராஜஸ்தான் மாநிலம், ஆழ்வார் மாவட்டத்தில் நேற்று கல்வீச்சு நடத்தப்பட்டது. இதையொட்டி பா.ஜ.க. மாணவர் அணி தலைவர் கைதாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த கல்வீச்சு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டுவிட்டரில்  ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

அவர்களது அமைப்பு (சங்பரிவார்) தாக்குதல் நடத்துவதற்கு போதிக்கிறது. ஆனால் அகிம்சை சத்தியாக்கிரகம், விவசாயிகளை பயமற்றவர்களாக ஆக்குகிறது. நாம் ஒன்றுபட்டு அவர்களது அமைப்பை எதிர்கொள்வோம். 3 வேளாண் சட்டங்களும், தேசவிரோத சட்டங்களும் ரத்து செய்யப்படுகிற வரையில் நாம் ஓயப்போவதில்லை.

இவ்வாறு அதில் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்