கோவாவில் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி புனித வெள்ளி கொண்டாட்டம்
கோவாவில் பனாஜியில் உள்ள இமாக்குலேட் கான்செப்சன் தேவாலயத்தில் புனித வெள்ளியான இன்று மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
கோவா,
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் ஏராளமான மக்கள் ஒன்றுகூடி ஆண்டவரைப் பிரார்த்தனை செய்வார்கள்.
இந்நிலையில், கோவாவில், பனாஜியில் உள்ள இமாக்குலேட் கான்செப்சன் தேவாலயத்தில் புனித வெள்ளியான இன்று மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
கரோனா தொற்று நோயையடுத்து, தேவாலயத்திற்கு வந்த பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டது. மேலும் நுழைவாயிலில் கிருமி நாசினி திரவியம் வைக்கப்பட்டுள்ளது.
தேவாலயத்திற்கு வரும் மக்கள் முகக் கவசங்களை அணிந்தும், சமூக இடைவெளி விதிமுறைகளைக் கடைப்பிடித்தும் வருகின்றனர்.