கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட அனுராக் சிங் தாக்குர்
மத்திய நிதித் துறை இணை மந்திரி அனுராக் சிங் தாக்குர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. பிறகு மார்ச் 1ஆம் தேதி, 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட, இணை நோயுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இதையடுத்து நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று தொடங்கியது.
அதன்படி மத்திய நிதித் துறை மந்திரி அனுராக் சிங் தாக்குர் நாடாளுமன்ற வளாகத்தில் முதல் தவணையாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.