மேடையில் பஞ்ச் டயலாக் பேசிய நடிகர் மிதுன் சக்கரவர்த்தி: ரசிகர்கள் ஆரவாரம்
''நான் நல்ல பாம்பு ஒரே கடியில் நீ போட்டோவாக மாறிவிடுவாய்'' என்று பஞ்ச் பேசியது ரசிகர்கள் கைத்தட்டி, விசில் அடித்து ஆர்ப்பரித்தனர்.
கொல்கத்தா,
நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, கடந்த கடந்த 2014ம் ஆண்டில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மாநிலங்களவை எம்.பி. ஆனார். ஆனால், சாரதா ஊழலில் அவர் பெயரும் அடிபட்டதால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டார்ர்.
திரிணாமுல் கட்சியில் ஒதுங்கியே இருந்த மிதுன் சக்கரவர்த்தி தற்போது பாஜகவில் இணைந்திருக்கிறார்.
மேற்கு வங்காலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நான் பெங்காலி என்பதில் பெருமைப்படுகிறேன். என் படத்தில் நான் பேசிய பஞ்ச் டயலாக்குகளை நீங்கள் அதிகம் விரும்புகிறீர்கள். இது எனக்கு நன்றாகவே தெரியும்.
நான் சாதாரண பாம்புன்னு தவறாக நினைச்சுடாத..நான் ஒரு நல்ல பாம்பு ஒரே கடியில் உன்னை காலி செய்துவிடுவேன்' என்றார்.
இது பழைய டயலாக். இதையே கொஞ்சம் மாற்றி சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, ''நான் நல்ல பாம்பு ஒரே கடியில் நீ போட்டோவாக மாறிவிடுவாய்'' என்று பஞ்ச் பேசினார்.
அவர் பஞ்ச் பேசியது ரசிகர்கள் கைத்தட்டி, விசில் அடித்து ஆர்ப்பரித்தனர்.