ரமலான் நாளில் நடைபெற இருந்த சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றம்
ரமலான் நாளில் நடைபெற இருந்த சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
சிபிஎஸ்இ தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு மத்தியக் கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால், சிபிஎஸ்இ இயக்குநர் ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் எம்.பி, சு.வெங்கடேசன் கடந்த பிப்.8-ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
இதனையடுத்து ரமலான் அன்று நடக்கவிருக்கும் சி.பி.எஸ்.இ தேர்வு தேதிகளை மாற்றுவதற்கான கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ரமலான் தினத்தன்று மே13, 15-ல் நடைபெற இருந்த சிபிஎஸ்இ 10 மற்றும் 12-வகுப்பு தேர்வு வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு இயற்பியல் தேர்வு ஜூன் 8, 2021 அன்று நடத்தப்படும்.
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் கணித தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
10 ஆம் வகுப்பு அறிவியல் தேர்வுக்கான புதிய தேர்வு தேதி: மே 21, என்றும்
10 ஆம் வகுப்பு கணிதத் தேர்வுக்கான புதிய தேர்வு தேதி: ஜூன் 2, தேதியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.