பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை ரூ.60 ஆக குறைக்கப்படும் - கேரள பாஜக தலைவர் பேட்டி

பாஜக ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலை ரூ.60 ஆக குறைக்கப்படும் என்று கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-04 13:17 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளிலும் தேர்தல் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற்னர். மேலும், இடதுசாரி, காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

 'பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி கீழ் கொண்டு வர கேரள அரசு கோரிக்கை வைக்காதது ஏன்?  நாங்கள் கணக்கிட்டுப் பார்த்தால் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோலை கொண்டு வந்தால், ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.60 தான் வரும்  மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தால், பெட்ரோல் விலை ரூ.60 ஆக குறைக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்