கர்நாடகாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 528 பேருக்கு தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று புதிதாக 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்நிலையில் காதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கர்நாடகாவில் இன்று இன்று புதிதாக 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,52,565 ஆக உள்ளது.
மாநிலம்முழுவதும் இன்று தொற்று பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிகை 12,346 ஆக உள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து இன்று 413 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிகை 9,34,143 ஆக உள்ளது. தற்போது வரை மாநிலம் முழுவதும் 6,057 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.