பாலியல் புகார் அளித்து சிறைக்கு அனுப்பியதால் ஆத்திரம் பெண் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய இளைஞர்

தெலுங்கானா மாநிலம் கொர்லகுண்டாவில், பாலியல் புகார் அளித்து சிறைக்கு அனுப்பிய பெண் மீது இளைஞர் ஒருவர் கோடாரியால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Update: 2021-02-03 10:26 GMT
ஐதராபாத்

தெலுங்கானா மாநிலம் கொர்லகுண்டாவைச் சேர்ந்த பெண்  விமலா (வயது 28).   விமலா  திங்கள்கிழமை மாலை 6.30 மணியளவில், ஒரு குழந்தையை கையில் வைத்துக் கொண்டு, தனது வீட்டின் வாசலில் மற்றொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது  திடீரென்று ஒரு வெள்ளை சட்டை அணிந்த  மர்ம நபர் வந்து அவரை கோடரியால் தாக்கத் தொடங்கினார்.

விமாலா   பயந்து அலறியடித்து ஓடுகிறார். தனக்கும் குழந்தைக்கும் எந்தவிதமான அடியும்  படக்கூடாது என விமலா உடனடியாக வீட்டிற்குள் ஓடுகிறாள். ஆனால் மர்ம மனிதன் விடாமல் பின் தொடர்ந்து தாக்கினார்.

 இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூடியதால் குற்றவாளி தப்பி ஓடி விட்டார். சி.சி.டி.வி.யில் இந்த காட்சிகள் பதிவாகி உள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த ராகுல் தோட் என்பவர்  விமலாவுக்கு ஏற்கனவே பாலியல் தொல்லை அளித்து மிரட்டி உள்ளார்.

இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராகுல் தோட் நிர்பயா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த ராகுல், புகார் அளித்த பெண்ணின் வீட்டிற்கே சென்று அவர் மீது கோடாரியால் கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டார்.

இதில் படுகாயமடைந்த பெண் ரங்கா ரெட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து ராகுல் தோட்டை கைது செய்த போலீசார், தாக்குதல் சம்பவத்தில் அவருக்கு உடைந்தையாக இருந்த மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்