தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி கிஷன் ரெட்டி நியமனம்

தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி கிஷன் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-02-02 23:01 GMT
புதுடெல்லி, 

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் பணிகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதன்படி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க.தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் தமிழகம் வந்து கூட்டணி விவகாரம் தொடர்பாகவும், சட்டப்பேரவைத் தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாகவும் கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து உள்ளனர். அதே நேரத்தில் வருகிற 14-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். 

இந்த சுழலில் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நேற்று நியமித்துள்ளது. அதன்படி தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன்ரெட்டியும், துணை பொறுப்பாளராக மத்திய மந்திரி வி.கே.சிங்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மேக்வாலும், துணை பொறுப்பாளராக ராஜீவ் சந்திரசேகரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் அசாமிற்கும், மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கேரளாவிற்கும் தேர்தல் பொறுப்பாளர்களாக கட்சியின் தலைமையால் நியமிக்கப்பட்டு உள்ளனர். கேரள தேர்தல் துணை பொறுப்பாளராக கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி அஷ்வத் நாராயணனும், அசாம் துணை பொறுப்பாளராக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்