குவைத் சென்றடைந்த கொரோனா தடுப்பூசி: வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டுவீட்

குவைத் சென்றடைந்த மேட் இன் இந்தியா கொரோனா தடுப்பூசிகள் குறித்து வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் டுவீட் செய்துள்ளார்.

Update: 2021-02-01 00:19 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் இருந்து ஒரு லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகள் ஓமன் நாட்டிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி மருந்தை இந்திய தூதர் முனுமகவர் அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் அகமது பின் முகம்மது அல் சயீதியிடம் ஒப்படைத்தார். 

இது குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டர் பதிவில், "எங்கள் நெருங்கிய நட்பையும் வலுவான உறவுகளையும் மதிப்பிடுதல்" என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்