குஜராத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட சுகாதாரப் பணியாளர் உயிரிழப்பு

குஜராத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட சுகாதாரப் பணியாளர் உயிரிழப்பு

Update: 2021-01-31 19:56 GMT
ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் வதோதரா மாநகராட்சியில் சுகாதாரப் பணியாளராக வேலைபார்த்து வந்தவர் ஜிக்னேஷ் சோலங்கி (30).இவருக்கு நேற்று காலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின் வீடு சென்ற சோலங்கி, சில மணி நேரத்தில் மயங்கி விழுந்தார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கொரோனா தடுப்பூசி போடப்பட்டது சோலங்கியின் மரணத்துக்கு காரணமாக இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்தனர்.

ஆனால் டாக்டர்கள், ‘சோலங்கிக்கு கடந்த 2016-ம் ஆண்டு முதல் இதயநோய் பிரச்சினை இருந்துள்ளது. ஆனால் அவர் நாளடைவில் மருந்து உட்கொள்வதை நிறுத்திவிட்டார். எனவே அவரது இறப்புக்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம்’ என்றனர்.

‘தடுப்பூசி போடப்பட்டதும் ஒரு மணி நேரத்துக்கு பின்தான் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். அதுவரை அவருக்கு எந்த பக்கவிளைவும் ஏற்படவில்லை. சோலங்கியின் உடல், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அவரது மரணத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும்’ என்று அதிகாரிகள் கூறினர்.

கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட  13 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்