அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா: பிரதமர் மோடி பங்கேற்பு
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
புதுடெல்லி,
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.
இந்த பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாகக் கலந்து கொண்டு காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார்.
மேலும் நிகழ்ச்சியின் போது ஒரு தபால் தலையையும் அவர் வெளியிடுகிறார். பல்கலைக்கழகத்தின் வேந்தர் சையேத்னா முஃபதல் சைபுதீன் மற்றும் மத்திய கல்வி மந்திரி ரமேஷ் போக்ரியால் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இந்த பல்கலைக்கழக விழாவில் 1964ஆம் ஆண்டுக்கு பிறகு கலந்து கொள்ளும் முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.