நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரை ரத்து செய்தது ஏன்? சிவசேனா
விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்விகள், விவாதங்களை தவிர்க்கவே குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக சிவசேனா தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த நவம்பர் 26-ஆம் தேதி முதல் பஞ்சாப், அரியாணா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திருமப் பெற வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்விகள், விவாதங்களை தவிர்க்கவே குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக சிவசேனா தெரிவித்துள்ளது. சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். அந்தப் போராட்டம் குறித்துக் கேள்விகள், விவாதங்கள் எழும் என்பதாலேயே மத்திய அரசு பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்த விருப்பமில்லாமல் ரத்து செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.