கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் அதிபர் விரைவில் குணமடைய வேண்டும் - பிரதமர் மோடி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-17 18:22 GMT
புதுடெல்லி,

உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் 7 நாட்கள் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு பணிகளை கவனிப்பார் என்று அதிபர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ எனது நண்பர் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் கொரொனா தொற்றிலிருந்து விரைவில் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் திரும்ப வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்