55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா - வங்காளதேசம் இடையே ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

55 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடியும் வங்காளதேச ச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இன்று ஹல்திபரி-சிலாஹதி ரெயில் பாதையை தொடங்கி வைத்தனர்.

Update: 2020-12-17 06:53 GMT
படம்: ANI
புதுடெல்லி

இந்தியாவும், வங்காள தேசமும் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றன. 

2020 மார்ச்சில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முஜிப் பார்ஷோ–வின் போது பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி செய்தி ஒன்றை அனுப்பினார். கொரோனா  பெருந்தொற்று காலத்தில் இரண்டு தலைவர்களும் தொடர்ந்து, தொடர்பில் இருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக பிரதமர் நரேந்திர மோடி, வங்காளதேச நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோருக்கு இடையிலான உச்சி மாநாடு  இன்று நடைபெற்றது.

இருதரப்பு உறவுகள், குறிப்பாக கொரோனாவுக்கு  பிந்தைய காலத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து அம்சங்கள் குறித்தும் இரண்டு தலைவர்களும் மாநாட்டில் விரிவாக விவாதித்தனர்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இன்று ஹல்திபரி-சிலாஹதி ரெயில் பாதையை தொடங்கி வைத்தனர்.

வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா உடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.   வங்காளதேசத்தின் முதல் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் நினைவு தபால்தலையை பிரதமர் மோடி வெளியிட்டார் 

அதனைத் தொடர்ந்து சிலாஹதியில் இருந்து ஹால்திபரி வரை சரக்கு ரெயில் இயக்கப்படுகிறது. ஹால்திபரி, வடகிழக்கு ரெயில்வேயின் கதிஹார் கோட்டத்தில் உள்ள முக்கியமான ரெயில்நிலையம் ஆகும்.

வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறும் போது வங்காள தேசம்  ஒரு சுதந்திர தேசமாக 50 ஆண்டுகளைக் கொண்டாடும் முனைப்பில் உள்ளது. மார்ச் 26, 2021 அன்று உங்கள் (பிரதமர் மோடி) டாக்கா வருகை வங்காலதேசத்தின் விடுதலைப் போரின் 1971 ஆம் ஆண்டின் கூட்டு நினைவேந்தலின் மகுடமாக இருக்கும் என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்