ராகுல் காந்திக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்? சிவராஜ் சிங் சவுகான் பாய்ச்சல்

ராகுல் காந்திக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்? என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கடுமையாக விமர்சித்தார்.

Update: 2020-12-16 17:01 GMT
போபால், 

மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தார். வேளாண் சட்டங்களை ராகுல் காந்தி விமர்சித்த நிலையில், இது குறித்து பேசிய சவுகான் கூறியதாவது: -

 “ ராகுல் காந்திக்கு விவசாயத்தை பற்றி என்ன தெரியும். வெல்லம் கரும்பில் இருந்து தயாரிக்கப்படுகிறதா? அல்லது இயந்திரத்தில் உற்பத்தியாகிறதா? என்பது கூட அவருக்கு தெரியாது.  தேசிய நலன்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் விவசாயிகளின் போராட்டத்திற்குள் ஊடுருவியுள்ளனர்” என்றார். 

மேலும் செய்திகள்