மின்னணு பண பரிமாற்றத்துக்கு புதிய செயலி ‘டாக் பே’ தபால்துறை தொடங்கியது

ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் மின்னணு முறையிலான பண பரிமாற்றத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

Update: 2020-12-15 23:58 GMT
புதுடெல்லி, 

ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் மின்னணு முறையிலான பண பரிமாற்றத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் விளைவாக கூகுள் பே, பேடிம், போன்பே என பல்வேறு செயலிகள் அறிமுகம் ஆகின. இந்த நிலையில், இந்திய தபால்துறை மற்றும் இந்திய தபால்துறை வங்கி சார்பிலும் தற்போது புதிதாக ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

அந்த செயலியின் பெயர் ‘டாக் பே’. இதை மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று தொடங்கிவைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த செயலி மூலம், தபால் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் உறவினர்களின் வங்கி கணக்குகளில் பணம் செலுத்தலாம். கடைகளில் பொருட்கள் வாங்கிவிட்டு ‘கியூஆர்’ குறியீட்டை ஸ்கேன் செய்து மின்னணு முறையில் பணம் செலுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்