திருமலையில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தின் போது பிரசாதம் வழங்காததால் பக்தர்கள் வாக்குவாதம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 7 மணி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் நடந்தது.

Update: 2020-12-13 19:33 GMT
திருமலை, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 7 மணி வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் நடந்தது. அதில் பக்தர்கள் பலர் சென்று மூலவர் ஏழுமலையானை வழிபட்டனர். வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் வழிபட்ட பக்தர்களுக்கு தீர்த்தப்பிரசாதம், சிறிய லட்டு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. அத்துடன் பக்தர்களுக்கு தலையில் சடாரி வைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த வி.ஐ.பி. பிரேக் தரிசன பக்தர்கள் அங்கிருந்த அர்ச்சகர்கள், அதிகாரிகளிடம் பிரசாதம் கேட்டு கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும், தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை உயர் அதிகாரிகள் விரைந்து வந்து, பக்தர்களை சமரசம் செய்து வெளியே அனுப்பி வைத்தனர். பக்தர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஏழுமலையான் கோவிலில் நேற்று அதிகாலை பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்