கேரளாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 4,698 பேருக்கு தொற்று உறுதி
கேரளாவில் இன்று புதிதாக 4,698 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து வருகிறது. கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4 ஆயிரத்து 698 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,69,330 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 29 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,623 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 59 ஆயிரத்து 438 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மேலும் 5,258 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 6 லட்சத்து 07 ஆயிரத்து 119 பேர் குணம் அடைந்துள்ளனர்.