ஜே.பி.நட்டா விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் - மம்தா பானர்ஜி

ஜே.பி.நட்டா விரைவில் குணமடைய தான் பிரார்த்தனை செய்வதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-13 14:59 GMT
கொல்கத்தா, 

நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா தொற்றுக்கு எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள், பல்துறை சார்ந்த பிரபலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

இந்தசூழுலில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளும்படியும், மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ளும்படியும் அவர் கேட்டு கொண்டுள்ளார். 

இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து ஜே.பி. நட்டா விரைவில் குணமடைய தான் பிரார்த்தனை செய்வதாக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் தகவலை அறிந்தேன். அவர் விரைவில் குணமடைந்து நல்ல உடல்நலம் பெற வாழ்த்துகிறேன். இந்த நேரத்தில் எனது பிரார்த்தனைகள் நட்டாவுடனும், அவரது குடும்பத்தினருடனும் உள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்