2021 ஹஜ் பயண விண்ணப்பங்களை அளிக்க கடைசி தேதி நீட்டிப்பு - மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி அறிவிப்பு

2021 ஹஜ் பயண விண்ணப்பங்களை அளிக்க கடைசித் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார்.

Update: 2020-12-11 08:24 GMT
புதுடெல்லி,

மும்பை ஹஜ் இல்லத்தில் இந்திய ஹஜ் குழுவின் கூட்டம் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி தலைமையில் நடந்தது.

கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:-

டிசம்பர் 10 ஆம் தேதி 2021 ஹஜ் பயண விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியாகஇருந்தது ஆனால் தற்போது இது 2021 ஜனவரி 10 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஆண் பயணிகள் உடன் வராத பெண்களுக்கான பிரிவில் (மேஹ்ரம் இல்லாத) 500 விண்ணப்பங்கள் உட்பட, மொத்தம் 40 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் இதுவரை ஹஜ் 2021-க்காக பெறப்பட்டு உள்ளது.  இப்பிரிவில், 2020-ஆம் ஆண்டுக்காக சமர்ப்பித்த விண்ணப்பங்கள் 2021-க்கும் செல்லும். மேலும், லாட்டரி முறையிலிருந்து இப்பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்படும். இணையம், இணையமில்லா முறை, ஹஜ் கைபேசி செயலி மூலம் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்