ஜனநாயகத்தை மிதித்துவிட்டு புதிய நாடாளுமன்றம் கட்டுவது எதை குறிக்கும் - காங்கிரஸ் கேள்வி
ஜனநாயகத்தை மிதித்துவிட்டு புதிய நாடாளுமன்றம் கட்டுவது எதை குறிக்கும் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா முடிந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இது குறித்து ஆவேச கேள்வி எழுப்பியது.
இதுகுறித்து அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தனது டுவிட்டரில், “பிரதமர் அவர்களே, நாடாளுமன்ற கட்டிடம் வெறும் சுண்ணாம்பு கலவையும், கற்களும் அல்ல. இது ஜனநாயகத்தின் பிம்பம். இது அரசியலமைப்பின் உள்ளடக்கம். இது பொருளாதார, அரசியல், சமூக சமத்துவம். இது இரக்கம் மற்றும் நட்புறவு. இது 130 கோடி மக்களின் எதிர்பார்ப்பு, நம்பிக்கை. இந்த மதிப்பீடுகளை மிதித்துவிட்டு கட்டப்படுகிற கட்டிடம் எதை குறித்து விடப்போகிறது?” என்று பதிவிட்டுள்ளார்.