ஆந்திராவில் மக்களை தாக்கும் மர்மநோயால் மேலும் 13 பேர் பாதிப்பு

ஆந்திராவில் மர்மநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 609 ஆக அதிகரித்து உள்ளது.

Update: 2020-12-10 19:15 GMT
விஜயவாடா, 

ஆந்திர மாநிலத்தில் உள்ள எலுரு நகரத்தில் மர்மநோய் மக்களை தாக்கி வருகிறது. இந்த நோய் பாதிக்கப்பட்டு ஏராளமானவர்கள் எலுரு மற்றும் விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். 

இந்த நிலையில், இந்த மர்மநோயால் புதிதாக 13 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் மர்மநோயின் தாக்கம் குறைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் மர்மநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 609 ஆக அதிகரித்து உள்ளது. மறுபுறம் இதுவரை 553 பேர் அந்த நோயின் பிடியில் இருந்து குணமடைந்து மீண்டு இருக்கிறார்கள். 

இதற்கிடையே மாநில துணை முதல்-மந்திரி ஏ.கே.கே.ஸ்ரீனிவாஸ் (சுகாதாரம்) விஜயவாடா மருத்துவமனைக்கு சென்று, மர்மநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் தண்ணீர் மாசுபாடு இந்த நோய்க்கு காரணம் இல்லை என்பது முதல் கட்ட ஆய்வில் தெரியவந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்