கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6.50 லட்சத்தை தாண்டியது

கேரளாவில் புதிதாக 4,470 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2020-12-10 18:07 GMT
கோப்புப்படம்
திருவனந்தபுரம்,

கேரளத்தில் புதிதாக 4,470 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 54 ஆயிரத்து 041 ஆக உள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 4,847 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் 5,91,845 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.  

அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 26 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 2,533 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது 59,517 பேர் கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்