ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா வெற்றி: மோடி தலைமை மீதான ஏழைகள் நம்பிக்கையே காரணம் ஜே.பி.நட்டா பெருமிதம்

காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது.

Update: 2020-12-09 22:23 GMT
புதுடெல்லி, 

காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது.

இதற்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடியின் தலைமை மீது ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோர் வைத்துள்ள நம்பிக்கையை இந்த வெற்றி உணர்த்துகிறது. இதற்காக ராஜஸ்தானை சேர்ந்த பெண்கள், விவசாயிகள் மற்றும் கிராமப்புற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்