காஷ்மீரில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் பயங்கரவாதிகள் மூன்று பேரை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.

Update: 2020-12-09 15:38 GMT
ஸ்ரீநகர்

ஜம்மு காஷ்மீரில்  புல்வாமா மாவட்டத்தின் திக்கென்னில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டத்தை அடுத்து பாதுகாப்பு படையினர்  பதிலடி கொடுத்தனர்.இதில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் மூன்று பேரும் அல் பத்ரா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், பயங்கரவாதிகள் சுட்டதில் பாதுகாபு படை வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி.பி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

இதேபோல சிங்ப்பூராவில் பாதுகாப்பு படை வாகன அணிவகுப்பை குறிவைத்து வெடிகுண்டுகள் வீசப்பட்டதில் அங்குள்ளவர்கள் 5 பேர் காயமடைந்ததாகவும், குண்டுகளை வீசியவர்கள் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்