டெல்லியில் புதிதாக 2,463- பேருக்கு கொரோனா தொற்று

டெல்லியில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,463- ஆக உள்ளது.

Update: 2020-12-09 12:58 GMT
புதுடெல்லி,

டெல்லியில் புதிதாக 2,463- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றில் இருந்து இன்று ஒரே நாளில்  4,177- பேர் குணம் அடைந்த நிலையில், தொற்று பாதிப்பால் இன்று 50 பேர் உயிரிழந்துள்ளனர். 

டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 99 ஆயிரத்து 575- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 69 ஆயிரத்து 216- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9,813-ஆகும். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 20,546- ஆக உள்ளது. 

மேலும் செய்திகள்