விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுக்க மாட்டார்: கர்நாடக முதல்வர் எடியூரப்பா
விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுக்க மாட்டார் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 12 நாட்களாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் இன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்தனர். இதன்படி நாடு முழுவதும் முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், கர்நாடகாவில் முழு அடைப்பிற்கு எந்த ஆதரவும் இல்லை என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இது குறித்து எடியூரப்பா கூறியதாவது: கர்நாடகாவிலோ, பெங்களூருவிலோ பாரத் பந்திற்கு யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. கரநாடக மாநில அரசும், மத்திய அரசும் விவசாயிகளுக்கு ஆதரவானது. விவசாயிகளுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி எடுக்க மாட்டார். அரசியல் காரணங்களுக்காக நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுப்பது சரியானது அல்ல. சட்டத்தை மீறுபவர்கள் மீது போலீஸ் தக்க நடவடிக்கை எடுக்கும்” என்றார்.